திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்


பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தஎவ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ். வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் தர்மராஜன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெகிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அரசு துறைகள் சார்பாக பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மற்றும் பாதுகாப்பு பணிகள், தீபத்திருவிழா நாளன்று கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு பக்தர்களை திருக்கோயிலுக்குள் அனுமதிக்க மேற்கொள்ளப்படுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளன்று திருவண்ணாமலை மாநகருக்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் அரசு துறை சார்ந்த பணிகளை ஆலோசனைகளை வழங்கினார்கள். மேற்கொள்ளும் பொருட்டு பல்வேறு
மற்றும் கிரிவலப்பாதை இடையே பயணிக்க எதுவாக கட்டணமில்லாமல் 220 தனியார் பள்ளி கல்லூரி பேருந்துகள் மற்றும் ரூ.10/- குறைந்த பட்ச கட்டணத்தில் 90 மினி பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அருகாமை மாவட்டத்திலிருந்து கூடுதலாக 90 மினி பேருந்துகளை ரூ.10/. குறைந்த பட்ச கட்டணத்தில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார் நிறுத்திமிடதிலிருந்து வருவதற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்போது 16 இரயில்கள் இயக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 16 சிறப்பு இரயில்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இது வரையில் 3530 ஆட்டோக்களுக்கு கீயு ஆர் கோடு பொறுத்தப்பட்டுள்ளது