பென்னாகரம் பகுதிக்கு போதுமான தொழிற்சாலை வசதி இல்லாததால் கால்நடை வளர்ப்பை இப்பகுதி மக்கள் பிரதானமாக கொண்டுள்ளனர்.பருவகாலம் மாற்றத்தினால் நோய்வாய்ப்பட்டு கால்நடைகள் இறங்குவதை தடுக்கும் வகையிலும்,கிராமங்கள் தோறும் மருத்துவ வசதி நேரடியாக கிடைக்கும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் பென்னாகரம் வட்டாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இன்று பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நடமாடும் கால்நடை மருத்துவமனை வாகன தொடக்க விழாவிற்கு மண்டல இணை இயக்குனர் (பொ)விஷ்ணு கந்தன் தலைமை வகித்தார்.விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி கலந்து கொண்டு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தினை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதன் மூலம் ஆடு மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், மடி நோய், கழிச்சல்,சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள்,கால்நடைகளுக்கான ரத்த பரிசோதனைகள்,இனப்பெருக்க ஊசி,கால்நடை சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வாகனத்தில் கொண்டுள்ளது.இதன் மூலம் கால்நடை மருந்தகம் அல்லாத கிராமப் பகுதியினர் இலவச உதவி எண் 1962 தொடர்பு கொண்டு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தின் மூலம் கால்நடைகளுக்கான சிகிச்சை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த மருத்துவமனை வாகனமானது வாரத்திற்கு ஒரு நாள் ஒரு கிராமம் வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.



