
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இடைநிலையாசிரியர்கள் தங்களது கண்களில் சிவப்பு துணி கட்டி மனு அளித்தனர்.
அந்த மனுவில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் நியமன தேர்வில் தமிழக முழுவதும் 25,606 தேர்வர்கள் எழுதினோம் ஆனால் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் 2768 காலி பணியிடங்கள் உள்ளது என அறிவித்திருந்தது.

இது ஆசிரியர்கள் அனைவரின் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது
மேலும் 2013 முதல் தற்போது வரை ஒரு காலிப்பணியிடங்கள் கூட நிரப்பாமல் நான்கு முறை TRP தேர்வு மட்டும் நடத்தியுள்ளது.
ஆனால் தற்போது எங்களுக்கு 40 வயது முதல் 50 வயதை கடந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ள 2768 காலி பணியிடங்கள் மிகவும் குறைவானது எனவே அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
