பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் வேளாண் உரிமை மின்சார இணைப்பு பெற்றிருக்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டு தோறும் சராசரியாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் மின் கட்டணம் செலுத்துவதை 20 ஆண்டுகள் தொடர்ந்து போராடி 59 உயிர்களை தியாகம் செய்து உரிமையை பெற்றுக்கொடுத்த உழவர் போராளிகளுக்கு வீரவணக்கம் பேரணி பாப்பாரப்பட்டி மின்சார நிலையத்தில் தொடங்கி மூன்றோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. பேரணிக்கு மாவட்ட அவைத் தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். தர்மபுரி மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் யோகானந்த மணி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ், உதயகுமார், ராஜ்குமார், ராஜமாணிக்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர். புதிய பஸ்நிலையம் அருகில் வீர மரணம் அடைந்த உழவர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.