கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் எம்ரால்டு நிறுவனத்தின் ஜூவல் ஒன் கிரிஷா அறக்கட்டளை சார்பாக ரூபாய் 30 லட்சம் மதிப்பீடு புதிய கழிப்பறை கட்டப்பட்டு பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானாவார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள அசோகபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் எம்ரால்டு நிறுவனத்தின் ஜூவல் ஒன் கிரிஷா அறக்கட்டளை சார்பாக CSR நிதி மூலம் ரூபாய் 30 லட்சம் மதிப்பீடு புதிய கழிப்பறை கட்டப்பட்டது.

இதனை பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பானாவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கழிப்பறை கட்டடங்களை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும் கழிப்பறைகளை பார்வையிட்ட ஆட்சியர் தூய்மையாக வைத்திருக்குமாறு ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவிற்கு எம்ராய்டு நிறுவனத்தின் தலைவர் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் மாணவ மாணவிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர். இதுகுறித்து தலைவர் சீனிவாசன் கூறும்போது, எம்ரால்டு நிறுவனத்தின் மூலம் கிராமம் முன்னேற்ற பணிகள் குறித்தும், மருத்துவ நல் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் விரிவாக தெரிவித்தார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, எம்ரால்டு நிறுவனத்தின் CSR திட்டத்தின் மேலாளர் தினேஷ்குமார், அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.