பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா

கோவை அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா தொடக்க விழா முன்னாள் மாணவர் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்றது…

கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,,மாணவர் மன்றத்தின் ஆண்டு செயல்பாடுகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பிரமுகர்கள் மற்றும் மாணவர் மன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர்

தொடர்ந்து விழாவில் பேசிய கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி,மாணவர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்..

தொடர்ந்து மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆரதி, செய்து வைத்தார்..

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் சங்கீத் பல்வந்த் வாகே பேசுகையில்,தற்போது கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியோடு தங்களது தனித்திறன்களை வளர்த்தி கொள்வது அவசியம் என தெரிவித்தார்..

குறிப்பாக வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய,ஒவ்வொரு மாணவர்களும் தங்களது உடல் ஆரோக்கியம்,மன உறுதி,திறன்களில் அதிக கவனம் செலுத்துவது மிக அவசியம் என தெரிவித்தார்..

தொடர்ந்து விழாவில் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்ட,கேப் ஜெமினி நிறுவனத்தின் மூத்த இயக்குனரும் மைய தலைவரும் ஆன கார்த்திகேயன், பேசுகையில் மாறி வரும் அறிவியல் உலகில் மாணவர்கள் புதிய சிந்தனைகளை உருவாக்கி அறிவு திறனை மேம்படுத்தி தலைமை பண்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார்..

நிகழ்ச்சியின் இறுதியாக,புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர் மன்றத் தலைவர் செல்வி. ஐகோ ஜாய்சன் நன்றியுரை ஆற்றினார்..