அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3.5 சதவிகித தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் புறக்கணிக்கும் வருத்தமளிக்கும் தீர்ப்பாகும்.
தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான ஆய்வுகளின் அடிப்படையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று, கலைஞர் கருணாநிதி 2007-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5% தனி இடஒதுக்கீட்டை வழங்கினார், ஆனால் அவ்வாறு வழங்கபட்ட இட ஒதுக்கீட்டை பறிக்கும் வபையிர் தற்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு இந்தத் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர்நீதிமன்றத்தின் பெரிய அமர்வில் மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% தனி இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கோவை மத்திய மாவட்டத்தின் சார்பில், உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் டி.எம்.எஸ். அப்பாஸ் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் ஷாகுல் அமீது, பழனி ஃபாரூக், மாநில பிரதிநிதி சாதிக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் கவுன்சிலர் அகமது கபீர், தமுமுக மாவட்டத் தலைவர் சர்புதீன், தமுமுக மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சியின், மாவட்டச் செயலாளர் இப்ராகிம், தமுமுக மாவட்டப் பொருளாளர் அசாருதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் நூர்தீன், ஷாஜகான், ஆஷிக் அகமது, அபு, ருசி மைதீன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.