
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் பட்டணம்காத்தான் கிங்ஸ் பேலஸ் மஹாலில் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர்,முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ,வனத்துறை அமைச்சர்,தேர்தல் பணிக்குழு தலைவர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,மாவட்ட பொருளாளர்,பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்பி-க்கள் பவானி ராஜேந்திரன்,அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ்,தி.மு.க மீனவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி,தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் விஜயகதிரவன் ஆகியோர் பேசினர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி,மாவட்ட துணை செயலர் கருப்பையா,முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல், நகர்மன்றத் தலைவர்கள் ஆர்.கே.கார்மேகம் (ராமநாதபுரம்),சேது கருணாநிதி (பரமக்குடி),துணைத்தலைவர்கள் டி.ஆர்.பிரவீன் தங்கம்
(ராமநாதபுரம்),வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் (கீழக்கரை),மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் சம்பத் ராஜா, தட்சிணாமூர்த்தி (ராமேஸ்வரம்),மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான்,மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்,மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர் உள்பட பலர் பங்கேற்றனர்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மகனும்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அண்ணணுமான நடிகர் மு.க.முத்து,கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.ஆகஸ்ட் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் இருந்து இரு வண்ண கொடிகளுடன் உற்சாக வரவேற்பளிப்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் நன்றி கூறினார்.
