
கண் அறுவை சிகிச்சை மையம் மாவட்ட மருத்துவம் மற்றும் நலபணிகள் இணை இயக்குனர் சாந்தி திறந்து வைத்தார்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை தனியாருக்கு நிகராக மாற்றும் வகையில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டது கண் அறுவை சிகிச்சை இயந்திரங்கள் கண் பரிசோதனை இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பொருத்தப்பட்டு உள்ளது இதனை இன்று மாவட்ட மருத்துவம் மற்றும் நலப் பணிகள் இணை இயக்குனர் சாந்தி தலைமையில் குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட கண் அறுவை சிகிச்சை மையத்தில் ஒருவருக்கு கண் அறுவை சிகிச்சை செயியப்பட்டார்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டு பின்பு கண் சொட்டு மருந்து பயன்படுத்தும் முறை குறித்தும் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கனிமொழி, மருத்துவர்கள் வெண்ணிலா தேவி, கலாவதி, அருண் பிரசாத், ஜே கனிமொழி, உதயகுமார் ,மற்றும் செவிலியர்கள் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் என உடன் இருந்தனர்.
