
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அரசு நகர்புற நிதிஉதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்த உள்ளார்.

அதனை தொடர்ந்து இன்று திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள அரசு பூங்கா தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம் துவக்க விழாவை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், திருப்பத்தூர் சேர்மன் சங்கீதாவெங்கடேசன் திருப்பத்தூர் நகர துணை சேர்மன் ஏ ஆர் சபியுல்லா. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன். பொதுக்குழு உறுப்பினர் அரசு. ரகுநாத். ஜோதி ராஜன். நகர மன்ற உறுப்பினர் பிரேம்குமார். ஜீவிதா பார்த்திபன். அசோகன். கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். ஹேமலதா வினோத். ஆசிரியர் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள்
காலை உணவு வழங்கிய தமிழக முதல்வருக்கும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் நன்றி தெரிவித்தனர்
