
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அட்வகேட் ராமநாத நகர் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா இன்று நடைபெற்றது இதில் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

பின்பு விநாயகருக்கு தீர்த்த தளங்களில் கொண்டு வந்த நதி நீர்களை கும்பாபிஷேகத்தில் மேல் கோபுரத்தின் மீது நீரூற்றி பின்பு விநாயகருக்கு தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது ஸ்ரீ துர்கா ஸ்ரீ லட்சுமி ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்ரீ நகர் கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் சிறப்பாக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் இதில் பொது மக்களுக்கு விநாயகருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தங்களை பிரசாதங்களாகவும் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது என குறிப்பிடத்தக்கதாகும்
