
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டியில் ஸ்ரீ திம்மராய பெருமாள் கோயிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திம்மராய பெருமாள் பக்தர்கள் பம்பை வாத்தியங்கள் முழங்க சுமார் இரண்டு கிலோமீட்டர் பூச கூடை எடுத்து நடை பயணமாக வந்தனர். பின்னர் தீப ஆராதனை காட்டி அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை நாயக்கர் என்கின்ற குண்டாடன் நாயக்கர் குடும்பத்தினர் தலைமை தாங்கினார். இந்த கோவில் திருவிழாவில் முதுகம்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள் பொது மக்கள் கலந்துகொண்டு குலதெய்வ வழிபாடு, முன்னோர்களின் மரபை தொடர்ந்து சிறப்பாக நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
