
தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் பேரூர், அடுத்த பச்சாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆவின் தொழிற்சங்கம் சார்பாக, கோவை மாவட்டம், மாதம்பட்டி அடுத்த குப்பனூர் பகுதியில் அமைந்துள்ள அன்பாலயம் எனும் முதியோர் மறு வாழ்வு ஆலயத்தில் வசிக்கும் முதியோர்கள், மாற்று திறனாளிகள், மனநலம் குன்றியவர்களுக்கு மதிய உணவு வழங்கபட்டது. காலை 10 மணி முதல், அன்பாலயம் சென்ற ஆவின் தொழிற்சங்க உறுப்பினர்கள், மற்றும் நிர்வாகிகள், அங்குள்ள முதியவர்களுடன் அன்றைய நாளை, மகிழ்ச்சியாக செலவிட்டனர். பாடல்கள் பாடியும், திரைப்பட வசணங்கள் பேசியும், தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும் முதியவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் இறை வணக்க பாடல்கள் பாடி, மதிய உணவுகளை உண்டனர். தொடர்த்து அன்பால் இணையும் இந்த ஆலயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் எப்பொழுதும் செய்ய தயார் நிலையில் உள்ளதாக ஆவின் தொழிற்சங்க நிர்வாகிகள் உறுதியளித்தனர். குறிப்பாக முதியவர்கள் பயன்படுத்தும் ஒற்றை படுக்கை, வீல் சேர், சோப்புகள், பேஸ்ட்கள், துணி மணிகள், என எந்த தேவாயாக இருந்தாலும் அதனை செய்து தருவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் பொழுது.. ஆவின் தொழிற்சங்க நிர்வாகிகளான தேவராஜ்,
மதன், கோகுல், ராஜேந்திரன், பாஸ்கரன், சக்திவேல், தெய்வகுமார், பிரசாந்த், வாசு தேவன், ரத்தினக்குமார், சசிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மேலும் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக்கழகத்தின்,கோவை தெற்கு தொகுதி ஒன்றிய செயலாளர் விஜய் கலந்து கொண்டு உணவுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
