தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தினர். குறிப்பாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள், கல்வி உபகரணங்கள், தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் என வழங்கி கொண்டாடினர்..

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோஸப் விஜயின் 52வது பிறந்தநாள் விழா அவருகளது கட்சி நிர்வாகிகளால் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து நடக்க பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்ட மன்ற உறுப்பினரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான க.விக்னேஷ் ஆலோசனையின் பேரில், கோவை தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோவை எஸ்.விஜய் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்க பட்டது. இதில் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மகளீரணி தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி, வர்த்தகஅணி விளையாட்டு அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முதற்கட்டமாக கோவை மாவட்டம்,
பேரூர், செட்டிபாளையம் பகுதியில், சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்க பட்டதுடன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள், 200 நபர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கபட்டது. தொடர்ந்து மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடத்த பட்டது. இதனையடுத்து கோவை,
ஆறுமுக கவுண்டனூர், பகுதியில் சுமார் 200 நபர்களுக்கு அன்னதானமும், அதே பகுதியை சேர்ந்த அரசுபள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கபட்டது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டம்
பச்சாபாளையம், பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாட பட்டது. மேலும் கோவை மாவட்டம், செல்லப்ப கவுண்டன் புதூர் பகுதியில், இலவச கண் சிகிச்சை முகாம், கோவை காளம் பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா, கோவை, தீத்திபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள், 250 நபர்களுக்கு மதிய உணவுகள், 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் என கடந்த இரு தினங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.