தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கம் பொதுச் செயலாளர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் மற்றும் மெடல் வழங்கப்பட்டது

புதுச்சேரி மாநிலத்தில் கம்பன் கலையரங்கத்தில் (11.10.2025) அன்று GLOBAL HUMAN PEACE UNIVERSITY மற்றும் பாரதிய சேவா சமாஜ் இணைந்து விழா நடைபெற்றது .

இதில் பொது மக்களிடையே சிறப்பான சமூக சேவை செய்யப்படும் நபர்களை கண்டறிந்து மாநிலம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்தனர்

இதில் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம் பொதுச் செயலாளர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நகர செயலாளர் வைகுண்ட மணி அவர்களுக்கு சிறப்பான முறையில் சமூக சேவை செய்ததற்காக டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது

தமிழ்நாடு ஸ்ரீலிங்கா கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் நெல்லை மாவட்டத்தை சார்ந்த தீ. வைகுண்ட மணி ,தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த. பா. சிவா சிறந்த சமூக சேவைக்கான விருதுகளை பெற்றுள்ளனர், தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த திரு. சந்தோஷ் சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது