ஆதரவற்று இறந்த ஆணின் புனித உடல் நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையம் எல்லைக்குட்ட பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சாலை விபத்தில் அடிப்பட்டு உள்ளார். இவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்ததில் இவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் புனித உடலை திருப்பத்தூர் காவல் நிலைய காவலர் பிரபு, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 186 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.