தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை கடுமையாக பேசும் ஒப்பந்த ஊழியர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.தர்மபுரி மாவட்டத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் இதுவே ஆகும்.இங்கே நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.பொதுமக்கள் கிராமங்களில் இருந்து இந்த மருத்துவமனை நம்பி தான் வருகின்றனர் ஆனால் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் கடினமாக நடந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.மாவட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களிடம் கடினமாக நடந்து கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.