ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த டூரிஸ்ட் வேன் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆட்டியூர் மொண்டுகுழி பகுதியில் இருந்து ஒகேனக்கல்லிற்கு ஈமச்சடங்கிற்காக இரண்டு வாகனங்களில் சென்றுள்ளனர் அதில் ஒரு வாகனத்தில் 24க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றி சென்ற டூரிஸ்ட் வாகனம் ஒகேனக்கல் கனவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

ஒகேனக்கல் மலைப்பாதையில் பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த டூரிஸ்ட் வாகனம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வாகன ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். குறிப்பாக பள்ளத்தை நோக்கி சென்ற வாகனம் வேகமாக சென்றதைத் தொடர்ந்து சாலையின் ஓரத்தில் இருந்த மலை மீது வாகனத்தை இயக்கி பின்பு இந்த டூரிஸ்ட் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த விபத்தில் வாகனத்தில் சென்றவர்கள் சிறுசிறு காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ள நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.