
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் மற்றும் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின் படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக மாற்றி காலம் முறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஒரு நாள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் தமிழக அரசு உடனடியாக எங்களை அழைத்து பேசி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டம் காத்திருப்பு போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என அதிரடியாக அங்கன்வாடி பணியாளர்கள் அறிவித்தனர்
