திருப்பத்தூர் மாவட்டம்நாட்றம்பள்ளி அருகே திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது!.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பாஜக கொடுத்தது அல்வாதான் அந்த அல்வாவை பொதுகூட்டத்தில் கலந்து பொதுமக்களுக்கு கொடுத்த திமுகவினர்!..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்கிற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதிஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொது கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி,கழக கொள்கைப் பரப்பு செயலாளர்
சபாபதி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தமிழகத்திற்கு பட்ஜெட்டில் பாஜக அல்வா தான் கொடுத்துள்ளார்கள் என பேசினார்.

பொதுகூட்டத்தில் கலந்து பொதுமக்கள் மக்களுக்கு இது தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் பாஜக கொடுத்தது அல்வா மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு திமுகவினர் கொடுத்தனர்.

உடன் இந்த பொதுகூட்டத்தின் போது மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் என 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.