பாஜகவுடன் திமுக கூட்டணியாக இருந்தபோது திமுகவின் தலைமை மாற்றியதா? திமுகவை அபகரித்ததா? அப்போது ஸ்டாலின் துபாயில் இருந்தாரா? கூட்டணி தர்மத்தின் படி தான் பாஜக செயல்படுகிறது

மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து பல்வேறு திட்டங்களை எடப்பாடியார் தமிழகத்திற்கு பெற்றுத் தந்தார்

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யவில்லை என்ற தொடர்ந்து முதலமைச்சர் பச்சை பொய் பேசலாமா?

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி .உதயகுமார் மதுரையில் பேட்டி

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு அறிவித்தை தொடர்ந்து மதுரை கேகே நகரில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும், கழக அம்மா பேரவையின் சார்பிலும், பொதுமக்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் பாஸ்கரன், ஆதிராஜா, வக்கீல் துரைப்பாண்டி, சரவணன் பாண்டி ,பேரையூர் ராமகிருஷ்ணன்,மதுரை அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்

ஆர். பி. உதயகுமார் கூறியதாவது

இன்றைக்கு மதுரை மக்கள் மற்றும் தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பாரதப் பிரதமர் அறிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து மத்திய அமைச்சரவை அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளது .இதனை எடப்பாடியார் வரவேற்று தென் மாவட்ட மக்களின் சார்பில் தனது நன்றியினை தெரிவித்துள்ளார் .

1942 ஆண்டு சென்னையில் இருந்து மதுரைக்கு அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள்களை வழங்குவதற்கு விமானம் சேவை செயல்பட்டது .

1952 ஆண்டு சிவில் விமான நிலையமாக இயக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு வணிக நடவடிக்கை விமானம் சேவை தொடங்கப்பட்டது. 2011 ஆண்டு அம்மாவின் ஆட்சி காலத்தில் மதுரை விமான நிலையம் சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, 2012ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு முதல் விமான சேவை புறப்பட்டு சர்வதேச நடவடிக்கை தொடங்கியது .

கடந்தாண்டு 13, 513 விமான இயக்கங்கள் செயல்பட்டன இதில் 1.39 மில்லியன் பயணிகளைகையாண்டது.
தற்பொழுது 2047 பாரதப் பிரதமர் தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ் உலக கதவுகள் திறக்கும் வகையில் இந்த மதுரை விமான சேவை மையமாக மாறும் .

கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மதுரை விமான நிலையத்தில் அண்டர் பாஸ் திட்டம் செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அந்த திட்டம் கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.

சர்வதேச விமான நிலைய அறிவிப்பின் மூலம் உலக விமான வரைபடத்தில் மதுரை இடம்பெறும் இதன் மூலம் சுற்றுலா, ரசாயனம், ரப்பர் உள்ளிட்ட தொழில் வளங்கள் வர்த்தக பலன்கள் உள்ளிட்டவை மேன்மை அடையும்.

ஆனால் திமுக அரசோ தொடர்ந்து, மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்படுகிறது என்று பொய் பிரச்சாரத்தை பல நேரம் கட்டமைத்து இதற்காக அதிக நேரம் செலவிடுகிறார் ஸ்டாலின்.

பொதுவாக மத்திய அரசும், மாநில அரசும் கூட்டு இலக்கணமாக இருக்க வேண்டும் என்று பாரத பிரதமர் கூறுகிறார். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது மத்திய அரசை வலியுறுத்தி 11 மருத்துவக் கல்லூரிகள் ,எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், திருமங்கலம் கொல்லம் வரை நான்கு வழி சாலை ,தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் ஸ்மார்ட் திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியை பெற்றுக் கொடுத்தார்.

தற்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது என்ற அபாண்டமான குற்றச்சாட்டை ஸ்டாலின் பேசுகிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய மதிப்பீட்டை கொடுக்கவில்லை இது குறித்து கேள்வி எழுப்பினால் முதலமைச்சர் இதுவரை பதில் கூறவில்லை.

இன்றைக்கு தமிழகத்தின் பெருமையை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் செங்கல்கோல் வைத்து பெருமை சேர்க்கப்பட்டது. அன்றைக்கு மதுரையிலும் இன்றைக்கு திருச்சியிலும் பல்வேறு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும்,
நலத்திட்ட உதவிகளையும் பாரதப் பிரதமர் வழங்குகிறார் மேலும் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எடப்பாடியார் முக்கிய பங்கு வகித்தார் .

இதெல்லாம் முன்மாதிரியாக ஸ்டாலின் எடுத்துக் கொள்ளாமல் வாக்கு வங்கிக்காக, மக்களை திசை திருப்பும் வகையில் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்து மக்களை அச்சுறுத்தி ,பயத்தை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற்று தன் குடும்ப வாரிசு அரசியலை தொடர்ந்து விரிவுபடுத்த கவனம் செலுத்துகிறார் .

தற்போது போர் நடைபெற்று வருகிறது இதனால் என்ன பாதிப்பு என்பதை மக்களுக்கு நன்றாக தெரியும். த…