
தமிழக முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை இயக்குனர் உத்தரவின்படி சேலம் மண்டல துணை இயக்குனர் வழிகாட்டுதலின்படியும் இன்று வாங்க கற்றுக் கொள்ளலாம் தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி பயிற்சி ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் பொறுப்பு முன்னணி தீயணைப்போர் முனுசாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது இந்த பயிற்சியில் ஒகேனக்கல் ஓட்டல் தமிழ்நாடு மற்றும் கூட்டுக் குடிநீர் திட்ட பாதுகாவலர்கள் பரிசல் ஓட்டிகள் மசாஜ் தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளூர் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவில் பிடிக்கும் தீ, குடிசை வீடுகளில் பற்றக்கூடிய தீ மற்றும் உணவங்களிலும் தங்கும் விடுதிகளிலும் ஏற்படும் தீ விபத்து எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து தீ தடுப்பு குறித்த அடிப்படை பயிற்சி நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் தீயணைப்பு பணியாளர்கள் முனுசாமி இளவரசன் அசோக் ஷிபா மற்றும் பரிசல் ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மசாஜ் தொழிலாளர்கள் பொதுமக்கள் தமிழ்நாடு ஓட்டல் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பாதுகாவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் பென்னாகரம் தீயணைப்பு மீட்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் சந்தோசம் தலைமையில் பணியாளர்கள் மற்றும் பலருக்கு வாங்க கற்போம் தீ தடுப்பு அடிப்படை பயிற்சி நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்த நிகழ்வில் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் உடன் இருந்தனர்.
