தமிழகத்தில் வாழ்வதற்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், தனித்தீவில் வசிப்பது போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ள அரசு!!!உரிய நடவடிக்கை எடுக்குமா தமிழக வெற்றிக்கழக தலைமையிலான அரசு!பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா என கேள்வி எழுப்பும் அப்பகுதி வாழ் மக்கள்!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சுமார் 1800 வீடுகள் கட்டப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் தற்பொழுது பயனாளிகளுக்கு வழங்க பட்டுள்ளது. இங்கு சுமார் 2 ஆண்டுகளாக வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான எந்த வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தர படவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு, அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது குறித்து, தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான போது தொழிலாளர்கள் நல வாரிய சங்க மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..
தமிழக முதல்வருக்கு எங்களது அமைப்பு சார்பாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது.
அந்த மனுவில், இந்த பகுதியில் உள்ள 1800 வீடுகளுக்கும், சுற்றுசுவர் இல்லாமல் காடு போல காட்சியளிக்கும் இந்த பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட, பாம்புகள், பூரான்கள், தேள்கள் வருகின்றது. இது இங்கு விளையாடும் குழந்தைகளையும் கடிக்கும் நிலை உள்ளது. ரேஷன் கடை உள்ளது ஆனால் இதுவரை திறக்க பட வில்லை. அதற்கான பணியாளர்கள் யாரும் நியமிக்க பட வில்லை, இங்கிருந்து மருத்தவமனை, மளிகை கடை, அத்தியாவசிய தேவைகள் உட்பட எங்கு செல்ல வேண்டும் என்றாலும் நடந்து தான் செல்ல வேண்டும், அரசு பேருந்து வசதிகள் இல்லை, பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர படவில்லை, தெருவிளக்கு இல்லை, நல்ல குடிநீர் வசதிகள் இல்லை. உப்பு தண்ணீருக்கு மாதம் 250 என வீடுகளுக்கு வசூலிக்க படுகின்றது. ஆனால் உப்பு தண்ணீரும் முறையாக வருவதில்லை நல்ல தண்ணீர் வந்தாலும் அதனை மாடி படிகளில் கொண்டு செல்ல வழியில்லை, கைகளில் தூக்கி செல்லும் நிலைதான் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு அவசர உதவி என்றால் கூட இங்கு இருந்து செல்ல வாகன வசதிகள் இல்லை. மொத்தத்தில் இங்கு வசிப்பது ஒரு தனித்தீவில் வசிப்பது போன்ற நிலையில் நாங்கள் வசிக்கின்றோம். குறிப்பாக 1800 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் சுப நிகழ்ச்சிகள் கொண்டாட ஒரு சமூதாய கூடம் இல்லை, முதுயவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் பொழுதை போக்கவும் ஒரு பூங்கா இல்லை, மேல் நிலை நீர் தேக்க தொட்டியில்லை இது போன்ற பங்வேறு வசதிகளை செய்து தாருங்ககள் என்று பலமுறை அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் மனு அளித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே முதல்வர் அவர்கள் இங்குள்ள 1800 குடும்பங்களையும் காக்க, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது
அதே பகுதியை சேர்ந்த மனோஜ் குமார், சசிகுமார், சமூக ஆர்வலர் பெஞ்சமின், மாநில தலைவர் ராதா, ஜொகரா, உண்ணாமலை, ராமு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.