
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52வது, பிறந்த நாளை முன்னிட்டு கோவை இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள, சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிலையத்தில், கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வர் விஜயின் படம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சில்க் வில்லேஜ் ஆராய்ச்சி மைய நிறுவனர் கைத்தறி முருகேசன் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது.
தற்போது தமிழகத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில், கைத்தறி நெசவு துறை உள்ளது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட முதல்வரின் படத்தை வைக்க வேண்டு்ம் அவ்வாறு செய்யும் பட்சத்தில், கைத்தறி நெசவு துறை, மீண்டும் புத்துயிர் பெறும் என்று தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக நலிவடைந்து
உள்ள நெசவாளரின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு இந்த உதவியை செய்து இத்துறையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும்
இது போன்ற படம் உருவாக்க கைத்தறியில் ஜக்காடு தொழில்நுட்பம் முறையில் சுமார் ஐந்து நாட்களாக நெசவு செய்யப்பட்டு உருவாக்கப்படும், முதல்வர் மட்டுமன்றி, உங்கள் வீட்டு உறவினர்கள், பிறந்தநாள் பரிசு புகைப்படங்கள், குழந்தைகளின் படங்கள் என அனைத்து புகைப்படங்களையும் ஜக்காடு கைத்தறி நெசவு முறையில் செய்து வழங்க படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் பொழுது சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
