திருமங்கலம் தொகுதி மக்கள், இரட்டை இலை ஆகிய புனிதமானஉறவை அவதூறு பரப்பி எத்தனை சூழ்ச்சி செய்தாலும் உறவை பிரிக்க முடியாது

திருமங்கலம் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டபோது அவரை தோற்கடிக்க சூழ்ச்சி செய்தவர்களுக்கு இன்றைக்கு தேமுதிக ஓட்டு கேட்கிறது

திருமங்கலம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஆர். பி .உதயகுமார் பிரச்சாரம்

மதுரை

திருமங்கலம் தொகுதியில் உள்ள சுரங்கராம்பட்டி, விருசங்குளம், விடத்துக்குளம், எட்டுநாழி புதூர், மைக்குடி அலப்பசேரி இடையபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர்.பி‌.உதயகுமார் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார்.

அவருடன் அம்மா சேரிடபுள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி முரளி, ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் ,மாவட்ட அவை தலைவர் முருகன் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாநில
எமஜி ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஏ.கே. பி சிவசுப்பிரமணியன், முன்னாள் சேர்மன் லதா ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரசாரத்தில் பெண்கள் துண்டைவீசிய படி வரவேற்றனர்

ஆர்.பி .உதயகுமார் பேசியதாவது

திருமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். குறிப்பாக கடந்த எடப்பாடியாரின் ஆட்சி காலத்தில் தான் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சி ஒன்றியமாக தேர்ந்தெடுக்கப்பட்டு 25லட்சம் ரூபாய் மத்திய அரசு நிதியை பெற்றது.அதேபோல சாலை மேம்பாடு, குடிநீர் திட்டத்திற்காக 90 கோடி சிறப்பு நிதியாக பெற்று கொடுத்தோம்.

அதேபோல திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடத்திற்கு இடத்தை தேர்வு செய்து நிதி ஒதுக்கி கொடுத்தோம். எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கிக் கொடுத்தோம் இதன் மூலம் 16 மாவட்டங்கள் பயன் பெறும்.

திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலைய திட்டத்திற்கு எடப்பாடியார் அரசாணை வெளியிட்டார் திமுக அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்பொழுது திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

இன்றைக்கு சிலர் அவதூறுகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள். நீங்கள் எவ்வளவு அவதூறுகளையும், பொய் பிரச்சாரம் செய்தாலும் திருமங்கலம் மக்கள், இரட்டை இலை இந்த உறவை நீங்கள் எத்தனை சூழ்ச்சிகள் சூதுகள் செய்தாலும் பிரிக்க முடியாது.

எனது வேட்பு மனு தாக்கலில் சொத்து முழு விவரத்தையும் தெரிவித்துள்ளேன்.நான் இன்னமும் ஹவுசிங் போர்டு வீட்டில் தான் குடியிருந்து வருகிறேன் மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை அமைச்சர் ,ஒருமுறை சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆகிய பதவியை வைத்து மக்களுக்காக சேவை தான் செய்தேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேமுதிக தொண்டர்களும் வேலை செய்தனர் இதில் விஜயபிரபாகரனுக்கு விருதுநகர் நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட இந்த திருமங்கலம் தொகுதிகளில் 10,500 வாக்குகள் பெற்றுத் தந்தது அதிமுக என்பதை யாரும் மறந்து விட முடியாது .

குறிப்பாக அந்த தேர்தலில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடாது என்று சூழ்ச்சி செய்து வெற்றியை யார் தட்டிப் பறித்தது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்

இதே பிரேமலதா விஜயகாந்த் ஒரு இளைஞன் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வதற்கு ஏன் வயிறு எரிகிறது என்று கூட கேள்விகள் கேட்டார் அன்றைக்கு அந்த வேட்பாளரை எதிர்த்து சூழ்ச்சி செய்த திமுக வேட்பாளருக்கு இன்றைக்கு தேமுதிக வாக்குகளை கேட்கிறது

ஆனால் அன்றைக்கு எந்த கட்சி அவரை தோற்கடித்ததோ அந்த திமுகவிற்கு இன்றைக்கு தேமுதிக வாக்குகளை கேட்கிறது இது கடவுளுக்கு கூட பொறுக்காது .

திருமங்கலத்தில் இரட்டை இலை தான் மலரும் எந்த கொம்பனாலும் திருமங்கலத்தையும் ,அதிமுகவையும் பிரிக்க முடியாது என கூறினார்.