
கோவை சிவாஜி காலனி பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல தலைமை அலுவலகம் அமைந்துள்ளது இதன் மாநிலத் துணைத் தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவர் கடந்த, 20 வருடங்களுக்கு மேலாக இலவச சட்ட ஆலோசனை மற்றும் சமூக சேவை செய்து வருகின்றார். இக்கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் சக்திவேல் இருந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி நடந்து வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கடந்த 08.06.2026-ம் தேதி விளம்பர நோட்டிபிகேஷன் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள். கவர்மெண்ட், மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் மற்றும் சப்-கோர்ட்டுகளில் மற்றும் விரைவு நீதிமன்றங்களில் உள்ள காலியிட பணிக்கு நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் உரிய விண்ணப்பங்களை தகுதிவாய்ந்த வழக்கறிஞர்கள் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார் வருகிற 25.06.2026-ம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி தேதி எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நியாயமான முறையில் அனுபவமிக்க தகுதியான வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பயிற்சி இல்லாத மற்றும் நீதிமன்றத்திற்கு வராத கட்சி வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யக் கூடாது என வேண்டிக் கொள்கிறோம். லஞ்ச லாவண்யத்திற்கு இடமளிக்காத வகையில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். கடந்த 50 ஆண்டு காலமாக எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த ஆளும் கட்சியின் சார்பாக பணத்தை வாங்கிக் கொண்டு கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சிபாரிசு உள்ளவர்களுக்கு மட்டும் தான் அரசு வழக்கறிஞர் பதவி வழங்கி வந்தார்கள் என அனைவரும் நன்கு அறிவார்கள். பணத்தை வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்ய வேண்டாம் என கேட்கிறோம் என்று மனு அளித்துள்ளார்.
எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு நியாயமான முறையில் தகுதி உள்ள அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் படி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்று மனு அளித்துள்ளார்
