தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை கெளரவப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் ஏழ்மையில் வாழும் அவர்கள் தீபாவளி தினத்தன்று புத்தாடை உடுத்த வேண்டும் அதற்கு நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்று எண்ணிய சமூக ஆர்வலர் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார் காலையில் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தவர்களை நேரில் சந்தித்து அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய கிப்ட் பாக்ஸை கொடுத்து பிரித்து பார்க்க சொன்னார்.

அச்சத்துடன் பிரித்து பார்த்த அவர்களது கண்கள் விரிவடைந்தன.
. பாக்ஸில் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுகள் ஆயிரம் ரூபாய் இருந்தது.
இந்த பணம் உங்களுக்கு தான் என சொல்லி தீபாவளி வாழ்த்துகள் கூறி புறப்பட்டார்
