
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மாவத்தூர் கிராமத்தில் பாலுக்கான விலையை உயர்த்தக் கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட அவை தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த கோரியும் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு 50 சதவீத மானியத்தில் மாட்டு தீவனங்களை வழங்க கோரியும் பால் கொள்முதலுக்கான தரத்தை 8.0 எஸ்என்எப் 4.0 பேட் தரத்தில் நிர்ணயிக்க கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர் போச்சம்பள்ளி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
