
கோவை மேட்டுப்பாளையம் சாலையில், C 5 கவுண்டம் பாளையம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் புதிய காவல் ஆய்வாளராக கந்தசாமி பொறுப்பேற்றார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக அதன் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் சந்தித்து வாழ்த்து கூறினார். இதில் சிவாஜி காலனி குடியிருப்போர் நலசங்க தலைவர் டாக்டர் லயன் நடராஜன், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், லட்சுமி, திவ்யா, ரம்யா, பெரியகுமாஸ்தா செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
