
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவானது அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் கேசவன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
அதிமுக மாநில விவசாயப்பிரிவு தலைவர் T.R. அன்பழகன், பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர கழக செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக விருந்தினராக முன்னாள் அமைச்சர் பாலகோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.பி. அன்பழகன்
கலந்துகொண்டு பின்னர் அப்பகுதியில் கோலப்போட்டி நடைபெற்றது கோலம் போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கேக்வெட்டி கொண்டாடினார், அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை, சுந்தரம், குட்டி, கேசவன், சௌந்தர், புஷ்பராஜ், ராஜி,பாபு ,அப்புசாமி, மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
