குளிர் பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நில அளவை சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வே.விஜயகுமரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள 33 மாவட்டங்களின் சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று சங்கத்தின் அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டது.

காலியாக உள்ள 1260க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், மருந்துகளை உரிய வெப்பநிலையில் பராமரித்திட குளிர் பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்கு அமைக்க வேண்டும்,

பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு உடனடியாக நடத்திட வேண்டும், அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய ஓய்வூதியத்தினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்களை நிறைவேற்றி தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.