
திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் வி வி ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் அமமுகவை சேர்ந்த டேவிட் அண்ணாதுரை, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் பாஜகவை சேர்ந்த ராக்கப்பன், தமாகவை சேர்ந்த அய்யல்ராஜ் உட்பட பலர் இருந்தனர் மாற்று வேட்பாளராக மகேஸ்வரி ராஜன் செல்லப்பா வேட்பு மனு தாக்கல் செய்தார் .
ராஜன் செல்லப்பா கூறியதாவது
திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளராக எடப்பாடியார் என்னை அறிவித்தார் இதனை தொடர்ந்து தற்போது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது .இன்றைக்கு எடப்பாடியார் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் செல்லும் இடங்கெல்லாம் மக்கள் திரண்டு வருகிறார்கள் .எடப்பாடியாரின் பேச்சு மக்களுக்கு ஒரு புது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது .
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தற்போது விழா நடைபெற்று வருகிறது நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடத்தப்பட்டது அதேபோல பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற்றது
சூரசம்ஹாரம் என்பது இந்த ஆட்சியை வீழ்த்தவும், பட்டாபிஷேகம் என்பது எடப்பாடியாருக்கு பட்டாபிஷேகம் சூட்டவும் ,திருக்கல்யாணம் என்பது எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் எனமக்கள் பேசி வருகிறார்கள்
திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை, விமான நிலைய விரிவாக்க போன்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம் .தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. குடிநீர் பிரச்சன இருந்து வருகிறது இன்றைக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசின் திட்டங்கள் முடங்கிப் போய் உள்ளது காசி விஸ்வநாதர் கோவிலில் ரோப் கார் திட்டங்களும் முடங்கிபோய் உள்ளது.
இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையோடு உள்ளது தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று நிச்சயம் மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் . திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக நான் வருவேன் அப்போது மக்களின் கோரிக்கை நிறைவேற்றி தன்னிறைவு பெற்ற தொகுதியாக திருப்பரங்குன்றத்தை மாற்றி காட்டுவேன் என கூறினார்.
