
கோவை இராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள், சுமார் 20க்கும் மேற்பட்டோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன், சில்க் வில்லேஜ் மையத்தில் ஒரு நாள் களப்பணிக்காக வந்திருந்தனர், அப்பொழுது அங்கு நெய்யப்படும் ஆடைகள், அதன் நுட்பங்கள், பழமை மாறா தறிகள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து, குறிப்புகள் எடுத்து கொண்டனர் மேலும் இயந்திரங்களை விட கைகளினால் நெய்யப்படும் ஆடைகளின் உழைப்பு, அதன் உறுதி தன்மை, வேலைப்பாடுகள், நுனுக்கங்களை நேரடியாக கேட்டறிந்தனர் மேலும், கைத்தறி, நேச்சுரல் டையிங், ஜக்கா டிசைனிங் குறித்த தொழில்நுட்ப சந்தேகங்களையும் ஒருவருக்குபின் ஒருவராக கேட்டு அறிந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மைய நிறுவனர் கைத்தறி முருகேசன், மற்றும் எஸ்.எஸ்.விஎம் பள்ளி குழும முதன்மை செயல் அதிகாரி மாயா ஜார்ஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இது குறித்து சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் முருகேசன் கூறியதாவது..
இன்றைய நவீன தலைமுறைகளுக்கு கைத்தறி ஆடைகள் என்பது கண்காட்சியில் கானும் வரு பொருளாக மட்டுமே உள்ளது. ஆனால் இத்துறையில் உள்ள வேலைப்பாடுகள், நழினங்கள் குறித்து தெரிய வைப்பது நமது கடமையாக உள்ளது. எனவே இது மாதிரியான பள்ளி மாணவ மாணவிகள் இங்கு வந்து பயிற்சி மெள்வது இத்துறையை மீட்டெடுக்கும் ஒரு யுக்தியாகும், வருங்கால சந்ததியினருக்கு இத்தகைய செயல் அவர்களின் கல்வி முறைக்கு மட்டுமின்றி, இத்துறையின் வளர்ச்சிக்கும் விதையாக அமையும் என நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
