
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். வருடந்தோறும் ஆவணி மாதத்தில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக வந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபடுவர். அதேபோல் நேற்று ஆவணி கடைஞாயிறை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ பாடைகட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் காலையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள், பொதுமக்களுக்கும் பொங்கலும், மதியம் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள், பொதுமக்களுக்கும் நீர் மோரும், மாலை சுமார் 3 ஆயிரம் பக்தர்கள், பொதுமக்களுக்கும் பொங்கலும் வழங்கப்பட்டது. நிகழ்வில் சங்கத்தின் தலைவர் எம்.எம்.சண்முகவேல், துணைத் தலைவர்கள் என். மாரிமுத்து, கோவி.இராமு, சண்முகசுந்தரம் யாதவ், பெத்த பெருமாள், துணைச் செயலாளர்கள் அப்பு ( எ) ரத்தீஷ்பாபு, வி.ஏ.வி.சூரியமூர்த்தி, சத்யா ( எ) கலியபெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் என்.சோமு, ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி, விசலூர் சேதுராமன், கரு.மூர்த்தி, மாடகுடி ஆசிரியர் பாண்டியன், முருகானந்தம், தீவிர உறுப்பினர்கள் மணி, தலசிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
