
கோவை ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள தி, சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின், 30-ம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி கோலாகலமாக இன்று கொண்டாட பட்டது. இவ்விழாவில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரஞ்சோதி, மற்றும் நிர்வாகிகள் சந்திரன், கண்ணபிரான், செந்தில், கீதா செல்வகுமார் மற்றும் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுடன் இந்த நாளை கொண்டாடினர்.

மேலும் இன்று துவக்கவிழா சலுகையாக சில்வர் ஸ்டார் சில்க் சாரீஸ் ரூபாய் 350-க்கும், பிராண்டட் பாக்ஸ் சாரீஸ் ரூபாய் .250-க்கும், லெஹெங்கா சாரீஸ் ரூபாய் 555-க்கும் கொள்முதல் விலையை விட குறைவாக ஒரு நாள் விற்பனை நடைபெற்றது. தீபாவளி, நவராத்திரி பண்டிகைக்கான புத்தம் புதிய ரகங்கள் இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் முன்னதாகவே வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதுடன், அனைவரும் விரும்பி துணிகளை வாங்கி செல்வதாக தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் நந்தகுமார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், துவக்கவிழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பிராக் ஸ்டுடியோ – பெண் குழந்தைகளுக்கான விழாக்கால பிரிவும், அழகிய சில்க் விழாக்கால சாரீஸ் பிரிவும், டிரேப்பிங் வகுப்பு, விளையாட்டு மற்றும்.கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக மேலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.
