
கோவை சுப்பிரமணியன்பாளையத்தில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி ஹிந்து முன்னணியின் மாநகர மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சசிக்குமார் மறைந்த 9-வது ஆண்டை முன்னிட்டு படுகொலை சம்பவம் நடைபெற்ற சுப்பிரமணியம் பாளையம் ஸ்ரீ சக்கர விநாயகர் கோவில் பகுதியில் ஹிந்து முன்னணி சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக ஜி.என்.மில்ஸ் பஸ் நிறுத்ததில் இருந்து இந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் தலைமையில் பி.ஜே.பி கட்சி மாநில செயலாளர் நந்தகுமார் முன்னிலையில் மோட்ஷ தீபம் கையில் ஏந்தி நிர்வாகிகள், தொண்டர்கள் என 750க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மெளன ஊர்வலமாக ஸ்ரீ சக்கர விநாயகர் கோவில் வரை வந்தனர்

.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த சசிக்குமார் உருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தி பேசினர். தொடர்ந்து அனைவரும் பயங்காரவதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பி.ஜே.பி மாநகர் மாவட்ட துணைத்தலைவர் தாமு, மாவட்ட பொதுசெயலாளர் பீர்த்திலட்சுமி, ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர்கள் உருவை பாலன், ராஜ்குமார், பொதுசெயலாளர் தியாகராஜன், செய்திதொடர்பாளர் ஜெய்கார்த்தி, தம்பி சரவணன் உட்பட 750க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், சசிக்குமார் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்துக்கொண்டு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
இதில் போலீஸ் துணை கமிஷ்னர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
