
ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2.10.2025 மற்றும் 3.10.2025 ஆகிய இரண்டு நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட வருகையின் போது அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் அரசு நிகழ்வு ஆகியவற்றை சிறப்பாக நடத்திட பெரும்பங்காற்றிய அனைத்து ஒன்றிய,நகர பேரூர் கழக செயலாளர்கள்,அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட மாநில,மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க தோழர்கள் பொதுமக்கள் மற்றும் அரசு விழா சிறப்பாக நடைபெற பெரும்பங்காற்றிய அரசு அலுவலர்கள்,பயனாளிகள்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
