
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் என்கேன்சுடு டெக்னிக்ஸ் இன் ரியல் டைம் அப்ளிகேசன் என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆய்வாளர்களின் ஆய்வுகட்டுரைகளின் தொகுப்பான ஆய்வு நூலினை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் என்கேன்சுடு டெக்னிக்ஸ் இன் ரியல் டைம் அப்ளிகேசன் என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரியின் சரஸ்வதி கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர்.

இக்கருத்தரங்கிற்கு யுனைடெட் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் தலைமையேற்றார். யுனைடெட் கல்வி குழுமத்தின் இயக்குநர் முனைவர் சிவகுமார் வாழ்த்துரை வழங்கினார். யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயா முன்னிலை வகித்தார்.
ஆய்வாளர்களின் ஆய்வுகட்டுரைகளின் தொகுப்பான ஆய்வு நூலினை சிறப்பு விருந்தினர்களான சென்னை டைமென்சன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சுரேஷ் ஸ்ரீனிவாசன், மலேசியா கர்டின் பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் மற்றும் கணினிப் பொறியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் சிவராமன் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வெளியிட கல்லூரியின் முதல்வர் பெற்றுக் கொண்டார்.
அவர்கள் தம் சிறப்புரையில் இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவினுடைய தேவை குறித்தும், அவை எவ்வாறு இயங்குகிறது, ஆக்கப்பூர்வமான முறையிலே எங்ஙனம் பயன்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அறிவினை எவ்வாறு பெற வேண்டும், அதற்கான இணையதளங்கள் எவை என்பது குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் கேரளா, பெங்களூர்,தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் தங்கள் ஆய்வு கட்டுரையை வழங்கினார்கள்.
சென்னை பெங்களூரின் முன்னணி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பேராசிரியர்கள் அமர்வு தலைவர்களாக பங்கேற்றார்கள். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறையின் தலைவர் முனைவர் பாலகுமார், உதவிப்பேராசிரியர் ருக்குமணிதேவி ஆகியோர் மேற்கொண்டனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி சார்பாக சிவப்பு கம்பள வரவேற்புடன் என் சி சி மாணவர்கள் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு மரியாதை வழங்கினர். இந்நிகழ்வில் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
