ஓப்போ மொபைல் புதிய F31 5G Series கோவையில் அறிமுகம்! 3 மாடல்களில் அறிமுகம் ஆகி உள்ள நிலையில் விற்பனைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது

ஒப்போ இந்தியா நிறுவனம் தனது பிரபலமான எப் வரிசையில் புதிய F31 5G Series-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும், மென்மையான செயல்திறனும் தேவையெனவும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, F31 Pro+, F31 Pro மற்றும் F31 என்ற மூன்று மாடல்களில் அறிமுகம் ஆகி உள்ளது.. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.

.

வலுவான கட்டமைப்பு, நீண்ட ஆயுள் பேட்டரி, வெப்பம் குறைக்கும் திறன் மற்றும் வலுவான இணைய இணைப்பு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள், இந்திய சந்தையில் ரூ 35,000 க்குக் கீழ் கிடைக்கும் மிக உயர்தர சாதனங்களாகும்..Pro+ மாடலில் வேப்பர் சேம்பர், எக்ஸ்பான்டட் கிராஃபைட் அடுக்குகள் சேர்த்து, 43°C வரை வெப்ப சூழலிலும் ஸ்மார்ட்போன்கள் தடையில்லாமல் மென்மையாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. சாப்ட்வேர் மட்டத்தில் OPPO-வின் டூயல்-எஞ்சின் ஸ்மூத்னஸ் சிஸ்டம் மூலம், ஸ்மார்ட்போன் 72 மாதங்கள் அதாவது, 6 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மென்மையாகவும் நம்பகமாகவும் செயல்படக்கூடியதாக உள்ளது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் கேமரா வசதிகள்:50எம்பி மெயின் கேமரா, 32எம்பி செல்ஃபி கேமரா மற்றும் பல AI வசதிகள் 4K வீடியோ பதிவு செய்யும் திறனும் கொண்டது… ஃப்ளாஷ் சார்ஜ் மூலம் 30 நிமிடங்களில் 58% சார்ஜ், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதிகளுடன், பேட்டரி ஆயுள் 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும். நாடு முழுவதும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.