தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனாஹள்ளி கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவ சிகிச்சை, தொற்றா நோய் சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை, கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, எலும்பு மூட்டு பிரிவு பரிசோதனை, காது மூக்கு தொண்டை பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, மாற்றுத்திறனாளிகள் சான்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்டவை இந்த மருத்துவ முகாமில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் அருண் பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் , ஜெயச்சந்திர பாபு , மருத்துவ அலுவலர் நாகராசம்பட்டி சுபாஷினி சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ,கிராமப்புற செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்
திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பச்சையப்பன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்,
மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

