கண்களில் கருப்பு துணி கட்டி மனு.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பி டி ஓ மீது நடவடிக்கை தேவை.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து ஈ.பி.அ.சரவணன் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா.

ரூ.7. கோடி மதிப்புள்ள 80.சென்ட் அரசாங்க இடத்தை மீட்டெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள பிறகும்கூட எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக காலம் கடத்தி வருகின்றது தொட‌ர்பாக உரிய தீர்வுகாண வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர். நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்…

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, கரைப்புதூர் கிராமத்திலுள்ள S.F.Nos.485/1A2, 485/1B2 & 485/2A இல் உருவாக்கப்பட்ட OSR நிலம் அப்படியே பாதுகாக்கப்படுவதை பல்லடம் பி டி ஓ உறுதி செய்ய வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் அலட்சியமாக போக்கில் செயல்படுகின்றதால் மேற்படி நிலத்தில் சட்டவிரோதமாக தனியார் கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றதால் பல்லடம் பி டி ஓ மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற (WP 39261/2025) உத்தரவு படி உடனடியாக ரூ.7 கோடி மதிப்புள்ள அரசின் ரிசர்வ் சைட்டை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும்.

மேற்படி அரசு நிலம் தற்போதைய சந்தை மதிப்பில் 7 கோடி ரூபாய் உள்ளதால் அரசாங்க இடத்தை உயர்நீதிமன்ற உத்தரவுபடி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்.

பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அரசின் ரிசர்வ் சைட்டை தனியாரிடமிருந்து மீட்க வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக தலைவர் ஈ.பி.அ.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் (WP 39261/2025) வழக்கு தொடுக்கப்பட்டது

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மாண்பைமிகு
நீதிபதி லட்சுமி நாராயணன் அவர்கள் ( ரிசர்வ் சைட்) 80.சென்ட் அரசு நிலத்தை உடனடியாக மீட்டெடுத்து கையகப்படுத்த பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டுமெனவும்

இந்த இடத்தில் கட்டுமானம் அல்லது வேறு எந்த வடி விலான ஆக்கிரமிப்பும் உடனடியாக அகற்றப்படுவது உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு அகற்றப்படும் போது யாராவது ஏதேனும் தடை செய்யப்பட்டால் அவர் தேவையான காவல்துறை பாதுகாப்பை எடுத்துக்கொண்டு தனது கடமையை செய்ய வேண்டும்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தனது கடமைகளை செய்வதில் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், இந்த பணிகளை மூன்று வார காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் வழக்கை வருகின்ற 25, ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தனது உத்தரவு தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வழக்கு தொடுத்து உத்தரவு பெற்ற சிலர் மறைமுகமாக தொடர்ச்சியாக தொந்தரவு செய்து பின் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றதால் உரிய பாதுகாப்பு வழங்கவும் பல்லடம் பி டி ஓ மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற (WP 39261/2025) உத்தரவு படி உடனடியாக ரூ.7 கோடி மதிப்புள்ள 80.சென்ட் அரசின் ரிசர்வ் சைட்டை தனியாரிடமிருந்து மீட்க விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.