திருப்பூரில் துணை சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க அரசிடம் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் கிராமம் வேலூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது இதில் ஒரு கிராம செவிலியர் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட செவிலியர் உட்பட இரண்டு பேர் முழு நேர பணியாளர்களாக உள்ளனர் மேலும் கிராம செவிலியருக்கு தங்குவதற்காக அரசு சார்பில் அங்கேயே இருப்பிடமும் வழங்கப்பட்டுள்ளது , நாளொன்றுக்கு சுமார் 100 நோயாளிகள் இந்த சுகாதார நிலையத்தில் பயன் பெற்று வருகின்றனர் இங்கே பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்றும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தார்கள் மேலும் அரசு உடனடியாக இதில் தலையிட்டு அரசு சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்துத் தந்தால் இங்கே வரும் நோயாளிகளுக்கும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்..
K.ஈஸ்வரமூர்த்தி