வடிவேலு காமெடி போல ரோட்டை காணவில்லை பொதுமக்கள் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்னபுத்தூர் ஊராட்சியில் சத்திரத்தில் இருந்து சின்ன புத்தூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது
இப்பகுதியை சுற்றி ஏராளமான தொழில் நிறுவனங்கள் மற்றும் காற்றாலைகள் உள்ளன
அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் இந்த சாலையை தான் போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் மேலும் அருகில் உள்ள நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் , பள்ளி மாணவர்களுக்கும் இந்த சாலையே பிரதான சாலை ,
நமது தமிழ்நாட்டுக்கு இது பருவ மழை காலம் , மழை இப்பொழுது சரி வர முடியவில்லை இப்பொழுது இந்த நிலைமை என்றால் அடை மழை காலத்தில் எல்லாம் இந்த சாலையை பயன்படுத்தவே முடியாது ஒருவேளை பயன்படுத்தினாலும் விபத்து நேரிடும் எனவே இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வடிவேலு காமெடியில் கிணற்றைக் காணோம் என்பது போல இங்கே ரோட்டை காணவில்லை என்கிறார்கள் மேலும் விரைவாக இந்த சாலையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார்கள்…
K. ஈ