மலேசியாவில் ஆர்டி ஈஷா நிறுவனம் சார்பில்கோவை ஜோதிடர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்குவளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 விருது

ஜோதிடத்தில் சிறந்து விளங்கும் கோவையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்கு மலேசியாவைச் சேர்ந்த ஆர்டி ஈஷா நிறுவனம் சார்பில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 என்ற சிறந்த ஜோதிடருக்கான விருது வழங்கப்பட்டது.

மலேசியாவைச் சேர்ந்த ஆர்டி ஈஷா ஹோல்டிங் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனம் சார்பில் புதிய தொழில்முனைவோர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது, அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பது மற்றும் அவர்கள் தங்கள் தொழில்களை வளர்த்தும் நிலைநிறுத்தியும் வரும் முயற்சிகளை பாராட்டும் வகையில் ஆண்டு தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர்களை தேர்ந்தெடுத்து பாராட்டி வளர்ந்து வரும் தொழில் முனைவோர் என்ற விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் 2026 ம் ஆண்டில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் விருதுகள் வழங்கும் விழா மலேசியா ஜொகூரில் உள்ள டி பார்ட்யூன் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டத்தோ டூடா டாக்டர் சந்திரன், டத்தோ தென் அரசு சுப்பையா, சைலஜா செல்வீகம், டாக்டர் சங்கர பிள்ளை, டத்தோ புவனேஷ்வரன் நெடுஞ்செழியன் என்கிற டத்தோ சத்யா, பிரகாஷ் குமார் மற்றும் அக்கீம் மரியம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

இந்த விழாவில் 35 தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஜோதிடத்தில் சிறந்து விளங்கும் கோவையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்கு வளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 என்ற சிறந்த ஜோதிடருக்கான விருது வழங்கப்பட்டது.