கோவையில் ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்..

ஜெம் அறக்கட்டளை சார்பில் கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3வது பதிப்பு வரும் பிப்ரவரி மாதம், 22ம் தேதி ஜெம் மருத்துவமனை வளாகத்தில் காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழ்நாடு தடகள சங்கத்தின் அங்கீகாரம் பெற்று, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.
அதற்கான டி சர்ட் வெளியிடுவிழா மற்றும் லோகோ அறிமுக நிகழ்ச்சி இன்று கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது . இதனை கோவை மாநகர ஆணையாளர் கண்ணன் வெளியிட்டார்.
தொடர்ந்து ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர்.சி. பழனிவேலு மற்றும் மருத்துவமனை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் ஆகியோர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது.. ஜெம் அறக்கட்டளை, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ முகாம்கள், ஏழை எளிய மக்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்களுக்கு கல்வி உதவிகள் போன்றவற்றின் மூலம் சமூகத்திற்கு சேவை செய்து வருகிறது. ரோட்டரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அமைப்பின் மூலம் 100 நோயாளிகளுக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சைகள் ஜெம் மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது மகளிருக்கான மாரத்தான் போட்டி ஜெம் மருத்துவமனை வளாகத்தில் வரும், பிப்ரவரி மாதம், 22ம் தேதி நடைபெற உள்ளது. 3கி.மீ, 5கி,மீ, மற்றும் 10 கிமீ மற்றும் 21 கிமீ என நான்கு பிரிவுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுவரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர். சுமார் 10000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தனர் மேலும், ஓட்டப்பந்தய வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை மற்றும் அமைப்பாளர்கள் உறுதி செய்துள்ளதாகவும்
ஜெம் அறக்கட்டளையானது பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுய மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு என எந்த நேரத்தையும் பொருட்படுத்தாமல் பெண்கள் நடமாட ஒரு பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவது இதன் நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்.