
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி கூத்தப்பாடி ஊராட்சி ஊட்டமலை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஊட்டமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமை தாங்கினார் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பச்சியப்பன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் அறிவழகன், ராமசாமி, மற்றும் ஆசிரியர்கள் கருணாமூர்த்தி, அருண்குமார் சக்தி சின்னசாமி, PTA தலைவர் முத்தையன்,SMC தலைவி அஞ்சலி,மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் ,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சின்னசாமி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் போர் ராஜ், மாவட்ட மீனவர் அணி தலைவர் மிதுன் காளியப்பன், மகளிர் அணி கீதா, கிளைச் செயலாளர் மோகன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மோகன், தேமுதிக பேரூர் கழக செயலாளர் பெருமாள் ,தேமுதிக கிளைச் செயலாளர் பாபு, ஒன்றிய அயலக அணி காவிரியப்பன் மற்றும் ஆசிரியர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
