
தமிழகம் முழுவதும் கடந்த 15ஆம் தேதி மக்களின் குறைகளை கேட்டு அறிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது அதனை தொடர்ந்து இன்று பென்னாகரம் அருகே உள்ள அஞ்சேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் குறைகளை மனுக்களாக பெற ஆதனூர் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இம் முகாமில் மகளிர் உரிமைப் தொகை ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு திட்டங்கள் என 15 துறைகள் 46 சேவைகள் அடங்கிய திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் நேரில் பார்வையிட்டார். இந்த முகாமில் தர்மபுரி மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) S.நர்மதா, பென்னாகரம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் சக்திவேல் , பென்னாகரம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் லோகநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
