திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வல்லகுண்டபுரம் பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

திருப்பூர் மாவட்டம்,
உடுமலை பேட்டை பகுதியில் உள்ள வல்ல குண்டா புரம், பகுதியில் ஜே.எம்.எஸ். அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பாக வல்லகுண்டபுரம் பகுதியில் உள்ள இயேசு என் மேய்ப்பர் ஆலயத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர்கள், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என சுமார் 220 நபர்களுக்கு உடைகள், மற்றும் உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆண்கள், பெண்கள் வயதானவர்கள், இரண்டு கண்களும் தெரியாதவர்கள், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள், இவர்களுக்கு தொடர்ச்சியாக மாதாமாதம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆடைகள் முடி வெட்டுதல், உடல் நலத்துக்கான பரிசோதனைகள், வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, கணவனை இழந்த பெண்களுக்கு தையல் மிஷின், இஸ்திரி பெட்டிகள், மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கான வழிமுறைகள் வழங்கப்பட்டது. கணவனை இழந்த பெண்களின் குழந்தைகளுக்கு படிப்பு, மற்றும் அதை சார்ந்த உதவிகள் செய்து வழங்கப்பட்டது. ஏழைத் தொழிலாளர்களுக்கு, இலவசமாக 25 தொழில்களுக்கு நலவாரிய பதிவு செய்து தரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்
ஜேஎம்எஸ் அறக்கட்டளையின் நிறுவனர் வி.
பால் பழனிசாமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் நாச்சி முத்து, கருப்பசாமி, சாமுவேல் ஜான், கார்த்திக், ரமேஷ் குமார், உறுப்பினர்கள் வீராசாமி, மற்றும் ஆலய உதவியாளர்கள் வழக்கறிஞர் குமாஸ்தாகள் ஜான், ரம்யா, பொள்ளாச்சி பத்மா, திருச்சி பாதர் ஜான் சாமுவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.