
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக யுகாம் பாராளுமன்ற கூட்டம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாகவும் அமர்ந்து அன்றைய நாட்டு நடப்பு குறித்த தங்களுடைய வாதங்களை முன் வைத்தனர். மேலும் பதவி ஏற்பு முதல் விவாதம், சட்டம் இயற்றுதல், வாக்கெடுப்பு, வெளிநடப்பு என பாராளுமன்ற நடவடிக்கைகளை தத்ருபமாக நடத்திக் காட்டினர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக யுகாம் பாராளுமன்ற கூட்டமானது கல்லூரியின் சரஸ்வதி அரங்கில் நடைபெற்றது.
பாராளுமன்ற தொடக்க நிகழ்வாக சபாநாயகர் வந்தவுடன் தேசிய கீதம் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்கள் மறைவிற்கு மெளன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக சார்டட் அக்கௌண்டட், ரீஜினல் கவுன்சில் மெம்பர், எஸ் ஐ ஆர் சி ஆப் ஐசிஏஐ சிஏ ராஜேஷ் கலந்து கொண்டு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட் குறித்தும் அதில் மாணவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பகுதிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு முன்னுரையை வழங்கினார்.
வணிகவியல் துறை சார்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாகவும் அன்றைய நாட்டு நடப்பு குறித்த தங்களுடைய வாதங்களை முன் வைத்தனர்.
இந்திய பாராளுமன்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை மாணவ மாணவிகள் தத்ரூபமாக பதவி ஏற்பு முதல் விவதம், சட்டம் இயற்றுதல், வாக்கெடுப்பு, வெளிநடப்பு என பாராளுமன்ற நடவடிக்கைகளை தத்ருபமாக நடத்திக் காட்டியதை மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர்.
யுனைடெட் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம் முன்னிலையில் இம்மாதிரிக் கூட்டம் நடைபெற்றது. யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயா தலைமையுரையாற்றினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் தேவிப்பிரியா மற்றும் வணிகவியல் துறைப் பேராசிரியர்கள் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.
