கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின், முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி, வளாகத்தில் நடைபெற்றது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின், முப்பத்தி மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி, ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர், முனைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குநரான முனைவர் கலைச்செல்வன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர். முன்னதாக ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் துறைத் தலைவர்கள், தங்கள் சம்பிரதாய ஆடைகளை அணிந்து, நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் சிறப்பின் அடையாளமாக விளங்கினர்.
முதல்வர், முனைவர் ஸ்ரீராம், ஸ்ரீராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி, வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், பட்டம் பெறும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை அங்கீகரித்தார்.
விழாவில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், கூறியதாவது..
மருந்துகளை பாதுகாப்பாகக் கையாளவும், மருத்துவமனைகளில் தர மேலாண்மை அமைப்பு அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். இவ்விழாவில், 375 பட்டதாரிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர். மேலும், கல்லூரியின் தங்கப் பதக்கத்தை வென்ற மாணவ மாணவியர்களான ஸ்ரீனிவாஷினி, கோபி, நேத்ரா, தாக்ஷயினி, காயத்ரி செண்பகம், ஹரிவர்மா நந்தினி, மற்றும் சுபாஷினி ஆகியோரின் கல்விச் சிறப்பும், முன்னாள் மாணவர் சங்கத்தால் வழங்கப்பட்டது. சிறந்த மாணவருக்கான விருதை யஷ்வர்தினி, ஜெர்ஷா, ஹரீஷ் கரோலின் ரீகா, யுவராஜ், நவீன் குமார், சங்கவி ரமன சரண் ஆகியோரின் சாதனைகளும் அங்கீகரிக்கப்படும் வகையில் கௌரவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது